தமிழக வசூல் வரலாற்றில் கமல் செய்த சாதனை - இமாலய இலக்கை எட்டிய 'விக்ரம்'

தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை விக்ரம் திரைப்படம் பெற்றுள்ளது.

Update: 2022-07-04 09:37 GMT

தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை விக்ரம் திரைப்படம் பெற்றுள்ளது.


 



இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வெளியான நாள் முதல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம்.



இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் மட்டும் 100 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. அதோடு தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையும் விக்ரம் திரைப்படம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 450 கோடி வசூலை விக்ரம் திரைப்படம் தற்போது நெருங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News