பாய்காட் ட்ரெண்டில் அடுத்து சிக்கப்போகும் விக்ரம்-வேதா

சமீபத்தில் படங்களை புறக்கணிக்கும் பாய்காட் ட்ரெண்டிங்கில் அடுத்த டார்கெட் ஆக விக்ரம்-வேதா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-09-04 14:04 GMT

சமீபத்தில் படங்களை புறக்கணிக்கும் பாய்காட் ட்ரெண்டிங்கில் அடுத்த டார்கெட் ஆக விக்ரம்-வேதா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




 

'எம் எஸ் தோனி' படத்தில் நடித்த பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு பாலியூட்டில் இருக்கும் வாரிசு அரசியல் தான் காரணம் என இன்று வரை குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதன் காரணமாக வாரிசு நடிகர்கள், நடிகைகள் நடித்து இரண்டு வருடங்களாக வெளிவரும் படங்களை எதிர்த்து விமர்சித்து வருகிறார்கள். இதனால் பாலிவுட் சில மாதங்களாக தோல்வியை தழுவி வருகின்றன.


 



சமீபகாலமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்த படம் 'லால் சிங் சந்தா' இந்த பாய்காட் ட்ரெண்டிங்கில் சிக்கி தோல்வியை தழுவியது. இந்நிலையில் அடுத்து வெளியாக இருக்கும் பிரம்மாஸ்திரா மற்றும் 'விக்ரம்-வேதா' திரைப்படமும் சிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News