300 கோடி வசூலை நெருங்கும் உலகநாயகனின் 'விக்ரம்'

வசூலை வாரி குவித்து வரும் விக்ரம் படம் 300 கோடி என்ற வசூல் இலக்கை நெருங்குகிறது.

Update: 2022-06-11 07:51 GMT

வசூலை வாரி குவித்து வரும் விக்ரம் படம் 300 கோடி என்ற வசூல் இலக்கை நெருங்குகிறது.



இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி வசூலை வாரி குவித்து வரும் படம் 'விக்ரம்' இதுவரை 200 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளது.




மேலும் இதன் வசூல் மேலும் 100 கோடி ரூபாய் அளவிற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கமலின் படம் இந்த அளவிற்கு வசூல் செய்தது இல்லை, 300 கோடி ரூபாய் வசூலை தாண்டும் பட்சத்தில் இந்த ஆண்டின் முதல் தமிழ் திரையுலகின் வசூல் குவித்த திரைப்படம் 'விக்ரம்' ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Similar News