மன்னிப்பு கேட்ட விருமன் பாடலாசிரியர்
பூவுடன் தான் ஒப்பிட்டேனே தவிர கஞ்சாவுடன் அல்ல என விருமன் படத்தின் பாடல் ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பூவுடன் தான் ஒப்பிட்டேனே தவிர கஞ்சாவுடன் அல்ல என விருமன் படத்தின் பாடல் ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் படத்தில் 'கஞ்சா பூ கண்ணால' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இளைஞர்கள் அதிகம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் நிலையில் கஞ்சா என்ற வார்த்தை பாடல் வரிகளில் இடம் பெறலாமா என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'கஞ்சா பூ கண்ணால' பாடல் எழுதியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் மணிமாறன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும் பொழுது கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.