விஷால் நடிக்கும் 'சக்ரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷால் நடிக்கும் 'சக்ரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Update: 2021-01-31 19:17 GMT

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். அந்தவகையில் இவர் நடிக்கும் சக்ரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. கொரனா வைரஸ் காரணமாக பல மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் 50% சதவீத இருக்கைகளுடன்  திறக்கப்பட்டன. தியேட்டர்கள் திறக்கப் பட்டாலும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் வரவில்லை என்பதால் OTT-யில் ரிலீஸ் செய்தனர்.

அந்த வகையில் விஷாலின் சக்ரா திரைப்படமும் OTT-யில் ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டே வாரங்களில் திரையரங்குகளில் மட்டும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் பல தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகளில் மீண்டும் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் திரைப்படத்தை OTT-யில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் விஷாலின் 'சக்ரா' திரைப்படம் பிப்ரவரி 19-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News