எங்களுக்கு மூச்சுவிட நேரம் வேண்டும்.. எங்கள் முன் கேமரா இல்லை.. நடிகர் விஜய், சிம்புக்கு டாக்டர் உருக்கமான பதிவு.!

எங்களுக்கு மூச்சுவிட நேரம் வேண்டும்.. எங்கள் முன் கேமரா இல்லை.. நடிகர் விஜய், சிம்புக்கு டாக்டர் உருக்கமான பதிவு.!

Update: 2021-01-05 18:59 GMT

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் முழுமையாக தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று (4ம் தேதி) அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதற்கு சினிமா துறையில் ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், சாதாரண குடிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாத்துறையில் மற்றொரு தரப்பினரான அரவிந்த்சாமி, நடிகைகள், கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரின் சோஷியல் மீடியா போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாக்டர் அரவிந்த் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சோர்வாக உள்ளனர். சுகாதாரத் துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

இந்நோய் பரவல் தடுப்பதற்காக நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை பார்த்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை. எங்கள் முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக தயாராகவில்லை.

பான்டமிக் இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி. இல்லை கொலை, சட்டம் செய்பவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த பான்டமிக்கில் இருந்து வெற்றிகரமான மீண்டு வர முயற்சிக்கலாமா? மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை.

நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் அரவிந்த். இவரது பதிவு மிகவும் உருக்கமாக உள்ளது. கடந்த 9 மாதங்களாக இந்தியா முழுவதும் பல மருத்துவர்கள் தங்களின் உயிரை விட்டும், மக்களை காப்பாற்றியுள்ளனர்.

திரைத்துறையினருக்காக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்பது அனைத்து மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் மீண்டும் இந்த முடிவில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

Similar News