வெப்சீரிஸ் ஆகிறது வடசென்னை ராஜன் வகையறா.
இயக்குனர் வெற்றிமாறனின் படைப்பான வடசென்னை பெரும் வெற்றியை பெற்றது. இதன் அடுத்த பாகமான 'வட சென்னை 2' வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில் வேறு மாதிரியான படைப்பை தர முன்வந்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
'வடசென்னை' ராஜனின் 15 வயது முதல் 24 வயது வரையிலான வாழ்க்கையை 'ராஜன் வகையறா'வில் காட்சிப்படுத்த இருக்கிறார் வெற்றிமாறன். இதில் ராஜனாக கென் கருணாஸ் நடிக்கிறார். இதற்கென கென் கருணாஸுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. கென் கருணாஸ் ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் தனுஷின் மகனாக நடித்தவர்.
சமுத்திரக்கனி உள்பட ராஜனின் நண்பர்களாக 'வடசென்னை'யில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் இந்த 'ராஜன் வகையறா'வில் இடம்பெற இருக்கின்றன. இதற்கான நடிகர்கள் தேர்வு நடக்க இருக்கிறது. வெற்றிமாறனின் வாடிவாசல் படப்பிடிப்பு முடிந்தவுடன் இதற்கான பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.