என்ன? தளபதி படத்தை இந்த இயக்குனர் இயக்க மறுத்துவிட்டாரா? இதுதான் காரணமாம்

தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்ததாகவும் அதை அவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான காரணம் பற்றி காண்போம்.

Update: 2023-06-04 17:15 GMT

தளபதி தற்போது 'லியோ' படத்தில் நடித்து வரும் வேலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்த விஷயமே. அதனோடு சேர்த்து இன்னொரு தகவலும் சினிமா வட்டாரத்தில் வெளியாகி உள்ளது . இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது .


இதற்கு காரணம் என்ன என்பது பற்றி பிரதீப் ரங்கநாதனிடம் கேட்டபொழுது அவர் நடிப்பில் மிகவும் ஆர்வம் காட்டி வருவதாகவும் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வர விரும்புவதாகவும் அதனால் தான் தளபதியை இயக்க தான் மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

Similar News