படப்பிடிப்பிற்கு விமானத்தில் சென்றபோது ரஜினிகாந்த் செய்த செயல்.!

படப்பிடிப்பிற்கு விமானத்தில் சென்றபோது ரஜினிகாந்த் செய்த செயல்.!;

Update: 2020-12-14 17:55 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். நேற்று முன்தினம் தனது எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும், ரஜினி ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அந்த வகையில் நேற்று ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 'அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக சென்றார். இதுகுறித்த புகைப்படங்களும் வைரலானது. 


 

இந்த நிலையில் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி விமானத்திலேயே பிறந்தநாள் கேக்கை ரஜினிகாந்த் வெட்ட, சுற்றி நின்றவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.விமானத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாள் கேக் வெட்டியது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

மேலும் விமான பயணிகளின் வேண்டுகோளை ஏற்று பிறந்தநாள் கேக் வெட்டிய ரஜினிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பயணத்தின் போது நடிகை நயன்தாரா ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் உடன் சென்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

Similar News