அக்கினினேனி - பாலகிருஷ்ணா மோதல் காரணம் என்ன?
அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் என்டி ராமராவ் ஆகியோர் தெலுங்கு திரை உலகை பல சாதனைகளை புரிந்தவர்கள்.
அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் என்டி ராமராவ் ஆகியோர் தெலுங்கு திரை உலகை பல சாதனைகளை புரிந்தவர்கள். தெலுங்கு சினிமாவின் பொற்காலமாக அவர்களது காலம் இருந்தது. இவர்களைத் தொடர்ந்து இவர்களின் வாரிசுகளும் தெலுங்கு சினிமாவில் இப்பொழுதும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பொங்கலுக்கு என்டி ராமராவ் மகனான பாலகிருஷ்ணா நடித்து வீரசிம்ஹா ரெட்டி படம் வெளிவந்தது. இப்படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய பாலகிருஷ்ணா "அக்கினேனி தொக்கினேனி.... அஅ ரங்காராவ், ஈஈ ரங்காராவ்" என கிண்டலான முறையில் அக்கினேனி நாகேஸ்வரராவ் பற்றியும், குணச்சித்திர நடிகரான எஸ்வி ரங்காராவ் பற்றியும் பேசினார்.
கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பான சர்ச்சை போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா, அகில் ஆகிய இவர்கள் நாகேஸ்வரராவின் பேரன்களும் நாகார்ஜுனாவின் மகன்களும் ஆவர். இவ்விருவரும் ஒரே விதமான அறிக்கையை தனித்தனியாக வெளியிட்டு இருக்கின்றனர். "நந்தமூரி தாரக ராமராவ் காரு (என்டிஆர்), அக்கினேனி நாகேஸ்வரராவ் காரு மற்றும் எஸ்வி ரங்காரா காரு ஆகியோ தெலுங்கு சினிமாவின் தூண்களாகவும் பெருமையாகவும் இருந்து பங்களித்தவர்கள் அவர்களை மரியாதை குறைவாக பேசுவது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது" என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
தெலுங்கு திரை உலகத்தில் பாலகிருஷ்ணாவுக்கும் நாகார்ஜுனாவுக்கும் எப்பொழுதுமே போட்டி உண்டு மேலும் இருவரும் நட்பாகவும் பழகிக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் இவ்வறிக்கையை நாகார்ஜுனாவின் மகன்களான நாக சைதன்யா, அகில ஆகியோர் வெளியிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
பாலகிருஷ்ணா பேச்சில் நிறைய தடுமாற்றங்கள் அன்றைய சக்சஸ் மீட்டில் இருந்ததாக நிகழ்ச்சி பார்த்தவர்கள் கமாண்டாக உள்ளது. பாலகிருஷ்ணாவின் பேச்சிற்கு பதிலடி கொடுப்பது போன்று அக்கினேனி குடும்பத்திலிருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் தான் தெரியும் இந்த விவகாரம் இத்துடன் அடங்குமா அல்லது மீண்டும் பாலகிருஷ்ணன் தரப்பில் இருந்து வேறு அறிக்கை வருமா என்பது.