ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன் - சிகாவின் திடீர் விஜயத்தின் காரணம் என்ன?

'ஜெயிலர்' படப்பிடிப்பில் சிவராஜ்குமார் அவர்களை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார்.

Update: 2022-11-20 14:15 GMT

'ஜெயிலர்' படப்பிடிப்பில் சிவராஜ்குமார் அவர்களை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார்.




 

பிரபல கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் முதன்முறையாக தற்போது தமிழிலும் நடிக்க வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவராஜ் குமார் நடிக்க வருகிறார். தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்திலும் நடிக்கிறார் இவர் இப்போது சென்னையில் நடைபெற்று வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.


 



அவரை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். படப்பிடிப்பில் இருவதும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அப்போது 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் யோகி பாபு உடன் இருந்தார். கடந்த 2015ல் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'வஜ்ரகையா' படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் அப்போது நல்ல நட்பில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News