பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார் தெரியுமா.?
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார் தெரியுமா.?;
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.இந்த நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் கடந்த வாரம் ரமேஷ் மற்றும் நிஷா இருவர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேற உள்ளார்.
இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜித், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகிய ஏழு பேர்கள் இருந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே அர்ச்சனா அடுத்த வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த வாரம் வெளியேறுவது ஒரு டுவிஸ்ட்டாக பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு உள்ளது. இது பற்றிய முழுமையான தகவல்கள் தெரியவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.