பிரபல நடிகருக்கு 'டாக்டர் பட்டம்' யார் தெரியுமா.? குவியும் வாழ்த்துக்கள்..!
பிரபல நடிகருக்கு 'டாக்டர் பட்டம்' யார் தெரியுமா.? குவியும் வாழ்த்துக்கள்..!;
தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதன்பின் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் மாதவன். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என நான்கு மொழிகளிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் நடித்து கடந்த மாதம் வெளியான மாறா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இந்நிலையில் நடிகர் மாதவனின் கலைத் திறமையை பாராட்டி கோலாபூரில் உள்ள டி.ஒய். பாட்டில் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இச்செய்தியை நடிகர் மாதவன் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.பட்டம் பெற்ற மாதவனுக்கு ரசிகர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Thank you so much Deepa https://t.co/tDaPR8gq7y
— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 18, 2021