நயன்தாராவை அடுத்து யோகி பாபுவுடன் நடிக்கும் பிரபல நடிகை.!

நயன்தாராவை அடுத்து யோகி பாபுவுடன் நடிக்கும் பிரபல நடிகை.!;

Update: 2020-11-09 17:30 GMT

கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவை ஒரு தலை பட்சமாக காமெடி நடிகர் யோகிபாபு காதலித்து வந்தார். அப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரிச் செய்தது. அதன் பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனையடுத்து யோகிபாபு நடிகை அஞ்சலியுடன் பேய் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளன.மேலும் அஞ்சலியை ஒருதலையாக காதலிக்கும்  கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் யோகிபாபு.இந்நிலையில் அவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.இப்போது அவர் அடுத்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் அஞ்சலி பேயாக நடிக்க அவரை உருகி உருகி காதலிக்கும் நபராக யோகி பாபு நடிக்கிறாராம்.

இப்படத்தை இயக்குனராக கிருஷ்ணன் ஜெயராம்  இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து நெட்டிசன்கள் அனைவரும் நயன்தாராவுக்கு அடுத்து அஞ்சலியா என்று கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Similar News