பிரபல நடிகர் விக்ரம் மகனின் அடுத்த பட 'இயக்குனர்' யார் தெரியுமா?

பிரபல நடிகர் விக்ரம் மகனின் அடுத்த பட 'இயக்குனர்' யார் தெரியுமா?;

Update: 2021-01-01 17:06 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். அவரது மகன் 'துருவ் விக்ரம்' தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இதுவரை ஆதித்ய வர்மா என்ற படத்தில் நடித்து இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். அந்த வகையில் தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படமொன்றில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது.  எனவே இவர் நடிக்கவிருக்கும் மூன்றாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

மூன்றாவது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் இந்த தகவலை துருவ் விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது தனுஷின் 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இவரது மூன்றாவது படமும் துருவ் விக்ரமுடன் இணையும் படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து பணிபுரியவுள்ளது குறித்து துருவ் விக்ரம் கூறியது: இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுடன் அடுத்த படத்திற்காக இணைவதில் நான் மிகவும் இணையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவர் மாரி செல்வராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News