தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா.?

தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா.?;

Update: 2021-01-02 16:54 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரின் அதிக ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இந்நிலையில்  தமிழில் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், கமலஹாசன் ஆகியோர் இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் கமல்ஹாசன், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதும் ஒரு இளம் இயக்குனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் அஜீத் இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பவர் இயக்குனர் கார்த்திக் நரேன் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே துருவங்கள் 16, மாஃபியா ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும், தற்போது அவர் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தனுஷ் படத்தை இயக்கி முடித்து விட்டு அடுத்ததாக அஜித்தின் 61-வது படத்தை இயக்குவார் என்றும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் நடிப்பது கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News