'ஆதி புருஷ்' படத்தின் வெளியீடு தள்ளிப்போவது எதனால் - படக்குழு தெரிவித்த உண்மையான காரணம்

பிரபாஸின் 'ஆதி புருஷ்' படம் வெளியாவதற்கு தாமதம் ஆவது ஏன் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Update: 2022-11-06 13:19 GMT

பிரபாஸின் 'ஆதி புருஷ்' படம் வெளியாவதற்கு தாமதம் ஆவது ஏன் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஆதி புருஷ்', ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் வால்மீகி எழுதிய ராமனத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இறுதி கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தினால் வெளியிட்டு தேதியை இன்னும் ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்து விட்டார்கள் என தெரிகிறது. ஆனால் தற்பொழுது அந்த செய்தியை படக்குழு மறுத்துள்ளது. அதில் 'ஆதி புருஷ்' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெறுகிறது எனவும் அதில் படமாக்கிய காட்சிகள் திருப்தி இல்லாமல் மீண்டும் ரீசூட் செய்கின்றனர் என்ற வெளியான தகவல் உண்மை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'ஆதி புருஷ்' படத்தில் இறுதி கட்ட மற்றும் வி.எப்.எக்ஸ் பணிகளுக்காக அதிக நேரம் தேவைப்படுகிறது அதன் காரணமாகவே படத்தின் ரிலீஸ் செய்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News