இரண்டாம் குத்து பட இயக்குனரை "திருந்த வாய்ப்பில்லை" என திட்டும் நெட்டிசன்கள்! ஏன்?

இரண்டாம் குத்து பட இயக்குனரை "திருந்த வாய்ப்பில்லை" என திட்டும் நெட்டிசன்கள்! ஏன்?;

Update: 2020-11-22 16:50 GMT
தமிழ் சினிமாவில்  அறிமுக இயக்குனராக வலம் வருபவர் சந்தோஷ் ஜெயக்குமார். தற்போது இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்தார். இப்படத்திற்கு பாரதிராஜா உள்ளிட்ட பல  நடிகர், நடிகைகள், பெண்கள் அமைப்புகள் என பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் தற்போது சந்தோஷ்  அவரது அடுத்த பட டைட்டிலை இன்ஸ்டாகிராமில்  வீடியோ போல டைட்டிலை வெளியிட்டிருந்தார். அதில்  அடுத்த படத்திற்கு "Mr.வெர்ஜின்" என்ற தலைப்பு வைத்துள்ளார். இரண்டாம் குத்து படம் போலவே இந்த படத்திலும் அவர் நடித்து இயக்கவுள்ளார் எனவும்  அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும், காதல் நிறைந்த  காமெடி படமாக வெளிவரும் என்று குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அனைவரும்  இரண்டாம் குத்து படத்திற்கு வந்த எதிர்ப்பை பார்த்து நீங்கள் பயப்படவில்லை, நீங்கள் 'திருந்த வாய்ப்பில்லை' என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News