மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடமா.?

மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடமா.?;

Update: 2020-11-24 15:42 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிம்பு. தற்போது உடல் எடையை குறைத்து பல படங்களில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் படம் மாநாடு.

பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் போஸ்டரில் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமிய இளைஞர் கேரக்டரில் நடித்துள்ள சிம்பு தொழுகை நடத்துவது போன்றும், அவரது நெற்றிக்கு நேராக இருந்த புல்லட், மூன்றாவது கண் போல் இருந்தது. அதனை அடுத்து தற்போது இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கையில் துப்பாக்கி வைத்திருப்பதைப் போல மாஸ்ஸான  போஸ்டரும் வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு போஸ்டர்களிலும் இருந்த சிம்புவின் கெட்டப்பை வைத்து சிம்பு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.இந்தநிலையில் இதற்கு விளக்கம் அளித்த மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி: படத்தில் நடிகர் சிம்பு ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்றும் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் சிம்புவின் ரசிகர்களுக்கு இரட்டை வேடம் இல்லை என்ற தகவல் தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாநாடு படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், மற்றும் முக்கிய கதாபாத்திரங்களாக எஸ்ஜே சூர்யா , எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி  அதில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News