பாலாஜி - சிவானியை போட்டுக்கொடுத்த கேபி குறும்படம் இருக்குமா.?

பாலாஜி - சிவானியை போட்டுக்கொடுத்த கேபி குறும்படம் இருக்குமா.?;

Update: 2020-11-15 16:23 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சி காண ப்ரோமோ வெளிவந்தது. அதில் முதல் ப்ரோமொவில்  கமல் போட்டியாளர்கள் இடம் இன்றைய வாரத்திற்கான  மிகவும் மோசமாக  விளையாடிய நபர் யார் என்று தேர்வு செய்ய சொல்கிறார் அதற்கு ரமேஷ், பாலா என்று கூறுகிறார்.அதற்கு ஏதோ பாலா எதிர்ப்பு தெரிவித்து போல் ப்ரோமோ முடிந்தது.

 அதனை அடுத்து பிக்பாஸ் வீட்டின் தலை தீபாவளி கொண்டாடப்படும் காரணத்தால் இந்த வாரம் நாமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.இதனால் வாரம் முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்கில் சோமிடமிருந்து பாலா பத்திரத்தை திருடினார். இதுகுறித்து பாலாவுக்கும்-கேபிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

அதில் கேபி ஹானஸ்ட்டாக பதில் சொல்லு பாலா என்று கூறினார்.அதற்கு பாலாவும் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். இதன்பிறகு ஷிவானி,சுசித்ரா இணைந்து நீ ஹானஸ்ட் இல்லாதவன், ஹானஸ்ட்டாக விளையாடமாட்டுற என்று கேபி கூறியதாக கூறினார். இதனால் பாலா வீட்டுக்குள் மீண்டும் வந்து கேபியிடம் தகராறில் ஈடுபட்டார்.அதை இன்று வந்த இரண்டாவது ப்ரோமோவில்
 

கமல் கேபியிடம் கேட்கும்போது பாலா திருடியதை நான் பார்த்துட்டேன். அதனால ஹானஸ்ட்டா சொல்லு பாலா அப்படினு சொன்ன, அவனும் அதுக்கு பதில் சொல்லிட்டு போயிட்டான். வெளியே போய்ட்டு உள்ளே வந்தான் என்று சொன்னதும் கமல் வெளியே என்ன நடந்துச்சு என்று கேட்கிறார்.

அதற்கு கேபி  எனக்கு தெரியல சார் என்று சொல்ல உடனே கமல் எனக்கு தெரியுமே என்று சொல்லி சம்மந்தப்பட்டவங்களே சொன்னா நல்லா இருக்கும் என்று ப்ரோமோ முடிகிறது.இதை பார்த்து பல ரசிகர்கள் இன்று குறும்படம் இருக்கும் என்று பலரும் பலரது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News