அனிதாவை இந்தவாரம் வெளியேற்றுவிர்களா? கமலிடம் கேட்ட ரசிகர்கள்!
அனிதாவை இந்தவாரம் வெளியேற்றுவிர்களா? கமலிடம் கேட்ட ரசிகர்கள்!;
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி வருபவர்களில் ஒருவர் 'அனிதா'. வாயைத் திறந்து விட்டால் மூடவே மாட்டார் என்றும் திடீர் திடீர் என்று கோபப்படுகிறார் என்றும் திடீரென அழுது ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.
இருப்பினும் யாரையும் சாராமல் தனித்தன்மையுடன் விளையாடி வருவது அவருடைய பாசிட்டிவ்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல் எந்த தயக்கமும் இன்றி யாருக்கும் பயப்படாமல் தனது மனதில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக சொல்பவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.
அதேபோல் அர்ச்சனாவின் அன்பு குரூப்பை உடைத்ததில் பெரும்பங்கு அனிதாவையே போய் சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நேற்று ஆரியிடம் அவர் கோபப்பட்டது மிகப்பெரிய தவறு என்று பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது.
இந்த ஒரே ஒரு காரணத்தினால் இந்த வாரம் அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள வாக்குகளின் அடிப்படையில் அனிதாவுக்கு தான் மிக குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும் இதற்கு சான்றாக உள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசன் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மற்ற நாட்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் நாகர்கோவிலில் சமீபத்தில் அவர் பிரச்சாரம் செய்தபோது அவருடைய ரசிகர்களில் ஒருவர் ஆண்டவரே அனிதா சம்பத் இந்த வாரம் போவாரா எப்படி என்று கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோவும் அதற்கு காமெடியான கமெண்ட்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.