பிரபல நடிகரின் மகளுடன் கைகோர்க்கும் விமல் - படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.!

பிரபல நடிகரின் மகளுடன் கைகோர்க்கும் விமல் - படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.!;

Update: 2020-11-12 17:20 GMT

தமிழ் சினிமாவில் 80,90களில் மிகவும் பிரபலமாக நடித்து வந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது அரசியலில் முழுமையாகவும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரின் மகள் வரலட்சுமி சரத்குமார் பல படங்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த சர்க்கார் படத்தில்  வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்.தற்போது 'கன்னி ராசி' என்ற படத்தில் விமலுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

 விமல் களவாணி-2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகமாக தெரியப்பட்ட ஒரு நபர் இவரின் எதார்த்த நடிப்பு பார்ப்போரை ரசிக்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் வரலட்சுமி இணைந்து நடித்து இருப்பது இப்படத்திற்கு நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். 
 

மேலும் காதல்,காமெடி, குடும்ப பிரச்சினைகள்,சுவாரசியமான  நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே  ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் சில பிரச்சினை காரணமாக நவம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.இதைப் பற்றிய முழு அறிவிப்பை படக்குழுவினர்  சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

Similar News