#BigBoss4 சனம் ஷெட்டி வெளியிட்ட பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் புகைப்படம் வைரல்!

#BigBoss4 சனம் ஷெட்டி வெளியிட்ட பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் புகைப்படம் வைரல்!;

Update: 2021-01-17 18:01 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை அடுத்து ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர் சனம் ஷெட்டி. அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைபடம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரிதான் என்பதே கிட்டத்தட்ட 50-நாட்களுக்கு முன்னரே பார்வையாளர்களுக்கு தெரிந்துவிட்டது. அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவும் ஒவ்வொரு முறையும் அவர் நாமினேட் செய்யப்படும்போது முதலாவதாக காப்பாற்றப்பட்டதும், அவருக்கு சமூக வலைதளங்களில் குவிந்து வரும் வாழ்த்துக்களும்  அதிகரித்துக் கொண்டே தான்  இருக்கின்றன.

இன்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் மேடைக்கு வந்து இருக்கின்றனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கூடிய நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் சனம் ஷெட்டி அவரது டுவிட்டர் பக்கத்தில் ஆரியுடன் இணைந்து ஃபினாலே நிகழ்ச்சியின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே அவர் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்றபோது ஆரி டைட்டில் வெல்ல வேண்டும் என மனமார வாழ்த்து தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்க்கப்படும் ஆரியுடன் இணைந்து சனம்ஷெட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News