'தளபதி அய்யா மனசு வைக்கணுமே' - விஜயுடன் நடிப்பது பற்றி கமல் கூறிய கலகல பதில்
விஜயுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் கூறியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
விஜயுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் கூறியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'விக்ரம்', இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தை இந்தியா முழுவதும் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு நிகழ்ச்சியில் விஜயுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு 'தளபதி ஐயா மனது வைத்தால் நான் நடிப்பேன்' என கமல் கூறியது சுவாரசியமாக பார்க்கப்பட்டது ரசிகர்களால்.