கிரிக்கெட்டில் அசத்தும் நடிகர் யோகி பாபு.. வைரலாகும் வீடியோ.!

yogi babu cricket player;

Update: 2021-03-09 06:55 GMT

கடந்த 2009ம் ஆண்டு யோகி படத்தின் மூலம் அறிமுகமான யோகிபாபு தற்போது தமிழ் திரைபடங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் ரஜினி, விஜய், அஜித் என பல்வேறு பெரிய நடிகர்களுடன் நடித்து உள்ளார். தற்போது அவரிடம் நிறைய படங்கள் கைவசம் உள்ளது.




 


இது மட்டுமின்றி பன்னி குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 



இந்நிலையில், யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேட்டிங் செய்யும் யோகி பாபு, நாலாபுறமும் பந்தை சிதறடித்து வருகிறார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசிதள்ளி வருகிறார். இந்த வீடியோவை யோகியின் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

Similar News