அரசியல் கலந்த காமெடி'யில் யோகி பாபு கலக்க வரும் 'மெடிக்கல் மிரக்கில்'

மீண்டும் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கும் படம் ஒன்றை துவங்கியுள்ளார்.

Update: 2022-06-17 05:28 GMT

மீண்டும் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கும் படம் ஒன்றை துவங்கியுள்ளார்.



தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நாயகன் யோகி பாபு, இவர் இயக்குனர் ஜான்சன்.கே இயக்கத்தில் புதிய படமொன்றில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


 



அரசியல் களத்தை மையமாகக் கொண்ட காமெடி கதையாக உருவாகும் இப்படத்திற்கு 'மெடிக்கல் மிராக்கில்' என பெயர் வைத்துள்ளனர். படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்க உள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

Similar News