புயலை சிறப்பாக எதிர் கொண்டீர்கள்.. மாநகராட்சியை புகழ்ந்து தள்ளிய நடிகர் மாதவன்.!
புயலை சிறப்பாக எதிர் கொண்டீர்கள்.. மாநகராட்சியை புகழ்ந்து தள்ளிய நடிகர் மாதவன்.!;
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று முன்தினம் புதுச்சேரி, சென்னைக்கு இடையே கரையைக் கடந்தது. இந்த புயல் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது.
ஆனால் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அதில் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு போதுமான அளவில் கையிருப்பு வைத்தது.
இதனால் பொருட்செலவு மற்றும் உயிரிழப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டது. புயல் பாதித்த இரண்டு நாட்களிலேயே இயல்பு நிலை திரும்பியது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தமிழக அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சென்னை மக்களை காப்பாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் மாதவனும் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள். இயல்பு நிலையை மீட்டுக் கொண்டு வந்தது பெருமையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.