பாலிவுட் செல்லும் அர்ஜுன் தாஸ் - எந்த படத்திற்காக தெரியுமா?

இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார்.

Update: 2022-07-01 07:30 GMT

இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார்.





லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு வில்லனாக அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ், இந்நிலையில் அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அங்கமாலி டைரிஸ்' படத்தின் ரீமேக்கில் ஹிந்தியில் நடிக்கவிருக்கிறார்.



இந்த படத்தை இயக்குனர் மதுமிதா சுந்தரராமன் இயக்க உள்ளார், இதனை குறிப்பிட்டு நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குனர் மதுமிதா மற்றும் லோகேஷ் நாகராஜுக்கு நன்றி என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Similar News