கவிஞர் சினேகன் கார் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.!

கவிஞர் சினேகன் கார் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.!;

Update: 2020-11-21 06:50 GMT

மக்கள் நீதி மய்ய இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் கார் மோதி காயமடைந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த சவேரியார் புரத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காரை ஓட்டி வந்தவர் மக்கள் நீதி மைய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் என்பது தெரியவந்தது.


இதனையடுத்து அவர் மீது திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கவிஞர் சினேகன் கார் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த அருண்பாண்டியன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது சினேகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்ப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Similar News