இந்து உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்த சவுதி அரேபியா - மனைவி நீதிமன்றத்தில் புகார்!

Update: 2021-04-16 05:56 GMT

சவுதி அரேபியாவில் இந்து ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவர் முஸ்லீம் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.


சவுதி அரேபியாவில் 51 வயது மதிக்கத்தக்க சஞ்சீவ் குமார் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் சவுதி அரேபியாவில் உயிரிழந்தார். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக அவரது மனைவி அஞ்சு சர்மா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர் இறந்து இரு வாரங்கள் கழித்து அவரது உடல் முஸ்லிம் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தூதரக அதிகாரி மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இறப்பு சான்றிதழில் சஞ்சீவ்குமார் ஒரு முஸ்லிம் என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது அதற்காக தாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் அஞ்சு சர்மாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சு சர்மா தனது கணவரின் இறுதி சடங்கை இந்து முறைப்படி நடத்த வேண்டும் என்றும் அதனால் தனது கணவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

புதைக்கப்பட்ட சஞ்சீவ் குமாரின் உடல் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் வெளியுறவு துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Similar News