பச்சை பெயின்ட் அடித்து கோவிலை அசுத்தப்படுத்திய எஸ்டிபிஐ!

Update: 2021-04-23 01:30 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலின் உள்ளே தூண்களில் இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ கட்சியின் பெயர் எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் இருக்கும் வாமனபுரம் அருகே உள்ள பெருந்துறா பகவதி அம்மன் கோவிலில் சுவர்கள், பலிக் கற்கள் ஆகியவற்றுக்கு பச்சை நிற பெயின்ட் அடித்தும் கோவில் முழுவதும் பச்சை நிறப் பொடியைத் ‌தூவியும் அசுத்தப்படுத்தி உள்ளனர்.

இந்தக் கோவிலில் உள்ள பலிக் கற்கள் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. இதை பக்தர்கள் தொடக்கூட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே பலிக் கற்களை இஸ்லாமிய அடிப்படை வாதிகள் வேண்டுமென்றே அசுத்தப்படுத்தி உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கோவிலில் உள்ள தூண்களில் அவர்கள் 'எஸ்டிபிஐ' என்று பச்சை பெயின்டில் எழுதி வைத்துள்ளனர். எனவே இது கோவிலை இழிவுபடுத்தி இந்துக்களை அவமதிக்கும் முயற்சி என்று பக்தர்கள் போராட்டம் நடத்தியதோடு காவல் துறையில் புகாரும் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை விஎச்பியும் கண்டித்துள்ளது.

எனினும் எஸ்டிபிஐ தங்களுக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்று தெரிவித்துள்ளது. பெருந்துறா பகுதியில் தங்களுக்கு உறுப்பினர்களே இல்லை என்றும் கூறியுள்ளது. தங்களைப் பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் தான் இவ்வாறு செய்திருக்கக்கூடும் என்றும் பழி போட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏற்கனவே 50 சதவீதம் மக்கள் தொகையைத் தாண்டி விட்ட நிலையில் சிறுபான்மையினராகி விட்ட இந்துக்களின் மத நம்பிக்கைகளை சீண்டுவது போன்ற இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிறிஸ்தவர்களே இஸ்லாமியர்களின் அடிப்படைவாத போக்கைக் கண்டு அஞ்சி பாஜகவுக்கு ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் இந்தியா இந்து நாடாக மாறினால் மட்டுமே இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் முஸ்லிம்களின் முயற்சியில் இருந்து தப்ப முடியும் என்று கூறி கிறிஸ்தவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu Post

Similar News