உலகின் மிக உயரமான பாலத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை செய்த பாதுகாப்பு படை:மாஸ் காட்சிகள்!
உலகின் மிக உயரமான பாலமாக கருதப்படுகின்ற செனாப் ரயில்வே பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்து 2022 ஆம் ஆண்டு முடிவடைந்து திறக்கப்பட்டது இந்தப் பாலம் ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்திற்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது செனாப் ஆற்றின் குறுக்கே 1178 அடி உயரத்தில் 4314 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 115 அடி அதிக உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது மேலும் இந்த பாலம் லிம்கா சாதனை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது இந்த ரயில்வே பாலத்தின் திட்ட பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிவடைந்தால் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ரயில்வே சேவையில் ஜம்மு காஷ்மீரும் இணைக்கப்படும் இதனால் சாலைப்போக்குவரத்தை மட்டுமே நம்பு இருக்கின்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு காலத்தில் செனாப் பால ரயில்வே திட்டத்தின் மூலம் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்வர்.
இந்த நிலையில் ஜம்மு&காஷ்மீரின் செனாப் ரயில்வே பாலத்தில் அனைத்து பாதுகாப்புப் படைகள் தீவிரவாத தடுப்பு ஒத்திகையை மேற்கொண்டுள்ளனர்.