மீண்டும் ஒரு புதிய கொரோனா வைரஸ் - இலங்கை அரசு தகவல்!

Update: 2021-04-25 07:02 GMT

இலங்கையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அவை முன்பு பரவிய வைரசை விட சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது என்றும் அந்நாட்டின் நோய் எதிர்ப்பு துறை தலைவர் தெரிவித்துள்ளார்.


இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முன்பு கண்டறியப்பட்ட வைரசை விட தற்போது அதிக சக்தி வாய்ந்த வைரஸாக இருப்பதால் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் தற்போது இலங்கையில் மேலும் ஒரு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வைரஸ்கள் காற்றில் ஒரு மணி நேரம் வரை இருக்கும் தன்மை வாய்ந்தது என்றும் இதனால் முன்பு கண்டறியப்பட்ட வைரசை விட அதிக சக்தி வாய்ந்ததாக இந்த வைரஸ் இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. மேலும் தொற்று பரவல் மிக வேகமாக இருப்பதாகவும் அதனால் கொரோனா மூன்றாவது அலை உருவாகக்கூடும் என்று அந்நாட்டின் நோய் எதிர்ப்புதுறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்து உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று இலங்கை தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உருமாறிக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் ட

திணறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு வழிகாட்டும் வழிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட்டால் நோய்த்தொற்றை குறைக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News