ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பாக அமையவிருக்கும் ஆக்சிஜனை உற்பத்தி ஆலை!

Update: 2021-04-25 12:05 GMT

ராமர் கோவிலை கட்டி வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பாக இரண்டு ஆக்சிஜன் ஆலையை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பாக அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அயோத்தியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் இந்த அறக்கட்டளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை‌ வேகமாக பரவி வருவதால் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை 55 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவ உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் அரங்காவலர் அணில் மிஸ்ரா தெரிவிக்கையில் இந்தியாவில் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 55 லட்சம் செலவில் இரண்டு ஆக்சிஜன் ஆலை அயோத்தியாவில் உள்ள தசரத மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு ஆலோசனையில் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தடையின்றி பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து பல டெல்லி மருத்துவமனைகள் முறையிட்டதை தொடர்ந்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை நெருக்கடி ஏற்பட்டது.

பற்றாக்குறை ஏற்பட்டதும் மாநிலங்களுக்கு இடையில் மருத்துவ ஆக்ஸிஜனின் இயக்கத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படாமல் இருக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும் எந்தவொரு ஆக்ஸிஜன் உற்பத்தியாளரும் சப்ளையரும் ஆக்ஸிஜன் விநியோகத்தை அவர்கள் இருக்கும் மாநில மருத்துவமனைகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப் படக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் கட்டளையிட்டது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோவிலை கட்டி வரும் ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது நாட்டின் ஆக்சிஜன் உற்பத்தியை மேம்படுத்தும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News