விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதால் விவசாயி தற்கொலை - உசிலம்பட்டியில் பரபரப்பு!

Update: 2021-04-28 01:00 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த ராமநாதபுரம் சேர்ந்தவர் சகாதேவன். 45 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் என்பவருக்கும் வீடு வாங்கியது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் சகாதேவனை மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சகாதேவன் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விவசாயி சகாதேவன் உயிரிழந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் சகாதேவன் தற்கொலைக்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திருமங்கலத்திலிருந்து தேனியை நோக்கி சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்த காரை போராட்டக்காரர்கள் திடீரென்று முற்றுகையிட்டனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மிரட்டியதால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் இதுபோன்ற அராஜக போக்கை மேற்கொள்வது அனைவரும் அறிந்த ஒன்றே என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Similar News