கடற்படைக்கு வலுசேர்க்கும் மேலும் இரண்டு போர்க் கப்பல்கள் - கடற்படை தகவல்!

Update: 2021-04-30 05:12 GMT

இந்திய கடற்படைக்கு வலு சேர்ப்பதற்காக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ராந்த் மற்றும் மறைந்திருந்து எதிரி நாட்டு ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட INS விசாகப்பட்டினம் ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய கப்பல் படைப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





கடந்த வாரம் சீன கடற்படை மூன்று முக்கிய போர்க்கப்பல்களை சர்ச்சைக்குரிய தென் சீன கடலில் உள்ள ஹெய்னன் கடற்படை நிலையத்தில் நிறுத்தியது. இதன் காரணமாக இந்திய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் இந்தியாவின் கடற்படையை வலு சேர்ப்பதற்காக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 45 ஆயிரம் டன் எடை கொண்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான INS விக்ராந்த் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை மறைந்திருந்து தாக்கும் வல்லமை கொண்ட INS விசாகப்பட்டினம் கிளாஸ் என்ற போர் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு போர்க் கப்பல்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் INS விசாகப்பட்டினம் பொருட்கள் நிலம், நீர் என இரண்டிலும் உள்ள எதிரிநாட்டு இலக்கை அழிக்கும் வல்லமை வாய்ந்ததாக இருக்கும். டார்பெடோக்களை அனுப்பி நீர்மூழ்கி கப்பல்களையும் தாக்கும் வல்லமை கொண்டது. இதன் சோதனைகள் அனைத்தும் மசகன் கப்பல் கட்டும் துறையில் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய கடற்படை தினமான டிசம்பர் 4 அன்று இந்திய கடற்படையில் சேர உள்ளது. இது ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் சிறப்பு அம்சங்களாக உள்ளது.

ஜெனரல் எலெக்ட்ரிக் டர்பைன்களால் இயக்கப்படும் INS விக்ராந்த் போர்க்கப்பல் மிக் - 29 கே விமானத்தின் 2 படைப்பிரிவுகளையும், கமோவ் கா - 31 ரகத்தின் 10 ஹெலிகாப்டர்களையும் தாங்கி செல்லும் திறன் கொண்டதாக விளங்குகிறது. இதன் மூலம் இந்த கப்பலுக்கு 15 ஆயிரம் கிலோமீட்டர் பரப்புக்கு வான்வெளி பாதுகாப்பு அளிக்க முடியும் என்று கடற்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News