இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை-அமெரிக்க அரசு உத்தரவு!

Update: 2021-05-01 08:20 GMT

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இந்தியர்கள் யாரும் வரக்கூடாது என்று அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று மட்டும் 4 லட்சம் பேர் புதிதாக நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய நோயினால் 3500க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் பல்வேறு உலக நாடுகள் தங்கள் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து பயணிகள் பயணம் செய்யக்கூடாது என்று தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அரசு மே 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியர்கள் யாரும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய கூடாது என்று தடை விதித்துள்ளது. இதில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் அமெரிக்க குடிமக்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவிற்கு யாரும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆஸ்திரேலியா அரசும் இந்தியாவிலிருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா முதல் அலையில் ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் அலை இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்ற கடுமையான சூழ்நிலையிலும் இந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சதவிகிதம் குறைவாக இருப்பது சற்று ஆறுதல் தரும் விதமாக இருந்து வருகிறது. இதேபோல் மற்ற நாடுகள் கொரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டபோது இந்தியா பல்வேறு உதவிகளை செய்தது. தற்போது இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Similar News