தொற்று நோய் பாதிப்புக்கு பிறகு, நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Update: 2021-05-07 11:58 GMT

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றில் இருந்து குணம் ஆகுபவர்களின் எண்ணிக்கையை விட தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையே மிகவும் அதிகமாக இருக்கிறது. அப்படியே கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்கள் கடுமையான பலவீனம் மற்றும் சோம்பலாக இருப்பதாக உணருவதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது எனவே இவற்றைத் தவிர்க்க சரியான உணவுகளை போதும். அது என்னென்ன உணவுகள் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். 


முக்கியமாக எல்லோருமே உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதைத் தவிர, நீங்கள் சர்பத் மற்றும் மோர் போன்ற பானங்களையும் குடிக்கலாம். இவை உடலில் ஒரு சீரான அளவிலான நீரேற்றத்தை பராமரிக்க உதவுகின்றன மற்றும் கோடையில் செரிமான அமைப்பு சீராக செயல்பட உதவுகின்றன. ராகி என்பது கால்சியம் சத்து நிறைந்த உணவு. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ராகியில் பாலிபினால்கள் எனப்படும் ஒரு பொருள் உள்ளது இதனால் காலை உணவின் போது ராகி தோசை உட்கொள்வது செரிமானத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும். மேலும் ராகி நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவுப் பொருளாகும். 


ஒருவர் ராகி கஞ்சியை அடிக்கடி குடித்தால், அதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது இரும்பு சத்தும் கொண்டுள்ளது, இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும். நீங்கள் காலையில் எழுந்ததும் ஊறவைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சையும் சாப்பிடலாம். இவற்றை ஊறவைத்து சாப்பிடும்போது மெல்லுவதற்கு எளிதாக இருக்கும். பாதாம் பருப்பு ஊறவைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்ற நொதி வெளியாகிறது, இது கொழுப்புகளை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. 


Similar News