கோடையில் குளு, குளு என்று இருக்க நீங்கள் செய்ய வேண்டிய விஷயம்!

Update: 2021-05-09 12:15 GMT

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கமும் மற்றும் அதே சமயத்தில் திடீரென்று மழை பெய்வதும் என மாறி மாறி வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் நோய் தொற்றுகள் நம்மை எளிதில் நெருங்க கூடும். எனவே மாற்ற இப்படிப்பட்ட காலநிலை மாற்றங்களினால் உடல் சூடு ஏற்படக்கூடும். உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். 


அதற்கு நீங்கள் நீராகாரம், பழச்சாறுகள் மற்றும் உங்களுக்கு பிடித்த வகையில் ஏதேனும் ஒரு பானங்களை பருகுவதன் மூலம் உடலை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். சரி, உடல் சூடு பிடிக்காமல் இருக்க என்னென்ன நீராகாரங்களை எடுத்துக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

கோடையில், சாதாரண தண்ணீரை விட புதினா மற்றும் இலவங்கப்பட்டை இரண்டையும் சேர்த்த தண்ணீர் குடிப்பது நல்லது. நீங்கள் புளிப்பு சுவை விரும்பினால், நீங்கள் எலுமிச்சையையும் சேரத்துக்கொள்ளலாம். இதனால் நீரின் சுவை இரட்டிப்பாகும். இந்த தண்ணீரை நீங்கள் நாள் முழுவதும் சாதாரண தண்ணீரைப் போல குடித்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.


புதினாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இது உடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக கோடையில் உங்கள் உணவில் நிறைய புதினா சேர்த்தால், இது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். இலவங்கப்பட்டை வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

பல்வேறு பருவகால நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும். எலுமிச்சை ஒரு அத்தியாவசிய பழம். இது வைட்டமின் C, ஆன்டி- ஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ளது. இது நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது. 

Similar News