இப்படி அவர்களால் எழுதிக் கொடுக்க முடியுமா? ...காங்கிரசுக்கு பிரதமர் விட்ட சவால்..!

Update: 2024-05-02 14:04 GMT

வருகின்ற மே 7ஆம் தேதி குஜராத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் குஜராத் முழுவதும் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பனாஸ்கந்தா என்ற மாவட்டத்தில் உள்ள பீசா நகரில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். 

அப்பொழுது, அரசியல் சாசனத்தில் பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது அதனை யாராலும் பறிக்க முடியாது. இட ஒதுக்கீடு பா.ஜ.க இருக்கும் வரை பாதுகாக்கப்படும் மேலும் நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற விளையாட்டை விளையாட விடமாட்டேன்! அதோடு நான் காங்கிரஸின் இளவரசருக்கும் அவரது கட்சிக்கும் சவாய் விட விரும்புகிறேன். "அவர்கள் அரசியல் அமைப்புடன் விளையாட மாட்டோம்! மத அடிப்படையில் இட ஒதுக்கீடை கொண்டு வர மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக அவர்களால் அறிவிக்க முடியுமா?" நிச்சயம் அவர்களால் அறிவிக்க முடியாது. 

எதற்காக என்றால் முஸ்லிம்களுக்கு மதத்தின் பெயரால் இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் காங்கிரஸ் அரசின் எண்ணம் ஆகும். அவர்களிடம் தொலைநோக்கு பார்வையும் கிடையாது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வமும் கிடையாது! 

அதோட அவர்கள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும் என்ற புதிய பொய்யையும் தற்போது பரப்பி வருகிறார்கள் என்று பேசினார். 

Source : Dinamalar 

Similar News