இஸ்லாமியர்களுடன் கிறிஸ்தவ மதம் பற்றிய விவாதத்தில் பங்கேற்ற பாதிரியாரை இஸ்லாமியர்கள் தலையையும் நாக்கையும் துண்டித்து துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் உகாண்டாவில் நடந்துள்ளது. தாமஸ் சிக்கூமா என்ற அந்த பாதிரியார் உகாண்டாவில் உள்ள ஒரு கிராமத்தில் பலரை மதம் மாற்றியதால் கோபமடைந்த அந்த ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
உகாண்டாவின் பல்லிசா என்ற பகுதியில் மத போதனை செய்து வந்த பாதிரியார் தாமஸ் அங்கு ஒரு கிராமத்தில் ஆறு முஸ்லிம்கள் உட்பட 14 பேரை மதம் மாற்றியுள்ளார். இதனால் அங்குள்ள முஸ்லிம்கள் அவர் மீது கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் ஒப்பிட்டு பைபிள் மற்றும் குரானை மேற்கோள் காட்டி பாதிரியார் ஒரு பொது விவாதத்தில் பேசியுள்ளார். இந்த விவாதத்துக்கு முஸ்லிம்களே அவரை அழைத்துள்ளனர்.
ஆனால் கிறிஸ்தவத்தை ஆதரித்து பாதிரியார் பேசியதைக் கண்டு எரிச்சலடைந்த முஸ்லிம்கள் "அல்லா-ஹூ-அக்பர்" என்று கோஷமிட்டதைத் தொடர்ந்து பாதிரியார் தனது மகனைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த முஸ்லிம்கள் இருசக்கர வாகனங்களில் தங்களை பின் தொடர்ந்ததாகவும் அவர்களை அணுகி பாதிரியார் பேசச் சென்ற போது விவாதத்தைப் பற்றி கோபமாக பேசியதாகவும் அவர்களில் ஒருவர் தனது தந்தையை அறைந்ததாகவும் பாதிரியாரின் மகன் கூறியுள்ளார்.
இதன் பின்னர் அச்சத்தில் மகன் வீட்டுக்கு ஓடி விடவே, பாதிரியாரின் மனைவி அக்கம் பக்கத்தினரை அழைத்துக் கொண்டு பாதிரியார் இருந்த இடத்துக்கு சென்று பார்க்க, அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் தலையும் நாக்கும் துண்டிக்கப்பட்டு பரிதாபமாக இறந்து கிடந்ததைப் பார்த்துள்ளனர்.
பாதிரியார் தாமஸ் உகாண்டாவின் கிழக்கு பகுதியில் மட்டும் 50 சர்ச்சுகளை நிறுவியிருக்கிறார். உகாண்டாவில் நன்கறியப்பட்ட மிஷனரியாகவும் இருந்துள்ளார். எனவே அவரது சர்ச்சைச் சேர்ந்தவர்களிடையே அவரது கொலை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவில் 12% முஸ்லிம்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source: OpIndia