வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்: உலக வல்லரசுகள் பட்டியலில் சேர இந்தியாவுக்கு தகுதி- புதின் புகழாரம்

உலக வல்லரசுகள் பட்டியலில் சேர்க்கப்பட இந்தியாவுக்கு தகுதியுள்ளது. அதன் பொருளாதாரம் மற்ற நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருகிறது என்று புதின் கூறினார்.

Update: 2024-11-10 15:52 GMT

ரஷ்யாவில் சோச்சி நகரில் நடந்த விவாதக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

இந்தியாவுடன் அனைத்து இலக்குகளிலும் ரஷ்யா நல்லுறவை வளர்த்து வருகிறது. இந்தியா மாபெரும் நாடு.மக்கள் தொகையில் 150 கோடியுடன் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.வேகமாக வளர்ந்து வருகிறது. பழமையான கலாச்சாரம் மேலும் வளர்ச்சி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எனவே உலக வல்லரசுகள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இந்தியாவுக்கு தகுதி உள்ளது. சந்தேகத்துக்கு இடம் இன்றி அப்பட்டியலில் இந்தியா சேர வேண்டும்.

ரஷ்யா-இந்தியாவிற்கு இடையிலான உறவு ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருகிறது. பாதுகாப்பு, இராணுவம் ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையிலான தொடர்பு வளர்கிறது.இந்திய ராணுவத்தில் எத்தனை வகையான ரஷ்ய ராணுவ உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாருங்கள். இந்தியாவுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்குவதை நிர்பந்திக்கிறோம்.

உதாரணம் பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணை வானம், கடல், நிலம் என மூன்று சூழ்நிலைகளில் பயன்படுத்தும் வகையில் அதை வடிவமைத்துள்ளோம். இந்தியாவின் பாதுகாப்புக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தங்கள் நாடுகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தகுதியான நபர்கள் அதற்கு தீர்வு காண்பார்கள். இதே அணுகுமுறை நீடித்தால் சமரசம் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News