கொரோனா தடுப்பூசி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள்.!

Update: 2021-06-10 12:53 GMT

கொரோனா தொற்று 2வது அலை தீவிரமாக பரவி வரும் வேளையில், மக்கள் பல்வேறு விதமான குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை, தீவிர காய்ச்சல், சளி, இருமல் போன்ற மிகவும் கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுதான். பெரும்பாலான மக்கள் சந்தேகத்துடன் தடுப்பூசி போடாமல் இன்னும் இருக்க செய்கிறார்கள். 


எனவே தடுப்பூசிகளை குறிக்கும் பல்வேறு விதமான செய்திகளும் மற்றும் வதந்திகளும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் இது பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நகரங்களிலும் சில மக்கள் தடுப்பூசிகளை போடுவது தயக்கம் காட்டுகிறார்கள் என்பது மறுப்பதற்கு இல்லை. தடுப்பூசிகளை நீங்கள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக தான் பார்க்கவேண்டும் முதலில் இது தான் அடிப்படை இதைப் போட்டுக் கொண்டால் நிச்சயம் நோய் வருமா? வராதா? என்பது இரண்டாவது விஷயம். 


தடுப்பூசி எடுத்துக் கொண்டால் கட்டாயம் தொற்று நோய் நம்மை தாக்கும் என்பது தற்போது ஒரு வதந்தியாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையே கிடையாது. ஏனென்றால், தடுப்பூசிகள் உண்மையில் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குகின்றன. எனவே தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், உடலில் உள்ள ஆன்டிபாடிகள் கிருமியை எதிர்த்துப் போராடி நோயாளி எளிதில் குணமடையவே உதவி செய்யும். நோய்த்தொற்றை உண்டாக்காது என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு காய்ச்சல், உடல் வலி மற்றும் ஊசி போட்ட இடத்தில் புண் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் அது நாளடைவில் குணமாகிவிடும். இது தவிர தடுப்பூசி வேறு எந்த கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

Similar News