டெல்டா வைரஸின் தாக்கம் செப்டம்பரில் அதிகமாகும் - ஜெர்மனியின் சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Update: 2021-06-20 12:45 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு ரூபங்களை எடுத்து தன்னுடைய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்டா வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ்களில் ஒன்றாக அறியப்படுகின்றது. உலக நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் முதலே குறைந்ததன் காரணமாக, அங்கு மெல்ல மெல்லத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், கொரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்தியதால் மூன்றாவது கொரோனா அலையை ஜெர்மனி கட்டுப்படுத்தியது.


இந்நிலையில் இவ்வருடமும் இறுதியில் டெல்டா கொரோனா வைரஸின் தாக்கம் ஜெர்மனியில் ஏற்படலாம் என்று ஜெர்மனியின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜெர்மனியின் மூத்த சுகாதார அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "ஜெர்மனியில் டெல்டா கொரோனா வைரஸ் மெல்ல அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் செப்டம்பர் மாதம் டெல்டா கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக ஏற்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டதாக அறியப்படும் டெல்டா வைரஸ், இந்தியாவில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த டெல்டா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளது.  வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது உருமாறிய கொரோனா வைரஸ்களுக்குப் பெயரையும் வெளியிட்டு உள்ளது. மேலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு லாம்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Similar News