இந்திய கடற்படை வளத்தை மேலும் அதிகரிக்க சூப்பர் சோனிக் டார்பிடோ ஆயுதம்!

சூப்பர் சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டார்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-02 04:53 GMT

சூப்பர் சோனிக் ஏவுகணையின் உதவியுடன் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட டார்பிடோ ஆயுதத்தின் செயல்பாட்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டி.ஆர். டி ஓ வெற்றிகரமாக புதன்கிழமை பரிசோதனை செய்தது. ஒலியை விட வேகமாக பயணிக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணையை சுமந்து செல்லும் டார்பிடோ ஆயுதம் கடலுக்கடியில் பயணித்து நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது .இது அதி நவீன இலகுரக ஆயுதம் ஆகும். வழக்கமான வரம்புக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவும் நீர்மூழ்கி கப்பல்களை எதிர்க்கும் இந்திய கடற்படையின் போர்த்திறனை மேம்படுத்தவும் இந்த ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய இந்த ஆயுதம் ஒடிசா கடலோரத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதுக்கு பாராட்டு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் சூப்பர்சோனிக் ஏவுகணையை சுமந்து செல்லும் டார்பிடோ ஆயுதம் இந்திய கடற்படை வளத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறியதாக பாதுகாப்பு அமைச்சக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.


SOURCE :Dinamani


Similar News