உலக நலன் வேண்டி பழநி முருகன் கோவில், திருஆவினன்குடி பெரியநாயகி அம்மன் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜைகள் அனைத்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்றது.
கொரோனா இரண்டாவது அலையால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழநியில் உள்ள முக்கிய கோயில்களில் உலக நலன் வேண்டி சங்காபிஷேகம், அன்னாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல் ஜூன் 23 மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளுடன் சங்காபிஷேக பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஜூன் 24ஆம் தேதி திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலிலும், ஜூன் 25ஆம் தேதி பெரிய நாயகி அம்மன் கோயிலிலும் அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் ஜூன் 26ஆம் தேதி பெரிய ஆவுடையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பூஜைகள் அனைத்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்றது. உலக நலன் வேண்டி முக்கிய திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.