அதிகாலையில் இதை செய்தால் உங்களுக்கு கிடைக்கும் ஏராளமாக நன்மைகள்!

Update: 2021-07-22 00:30 GMT

தினமும் காலையில் எழுந்து வாக்கிங் போனால் நிச்சயமாக நிறையவே நல்லதெல்லாம் நடக்கும். ஒரு புதிய நாளை ஃப்ரெஷாக தொடங்க காலையில் எழுந்ததும் ஒரு குட்டி நடைபயிற்சி சென்றால் நல்லெல்லாம் நீங்கள் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். நடைபயிற்சியோடு உடற்பயிற்சி மேற்கொண்டால் உங்கள் உடலின் ஆற்றல் அளவு நன்கு அதிகரிக்கும். நாள் முழுக்க சோர்வே இல்லாமல் இருக்கலாம், மேலும் உங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.


சிறந்த மனநிலை, மன அழுத்த குறைதல் மற்றும் பதட்டமின்மை எல்லாம் உங்களுக்கான தேவையாக இருந்தால் தினமும் காலையில் கட்டாயமாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைபயிற்சி உங்கள் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த நன்மைகளை வழங்கும். நடைபயிற்சி எண்டோர்பின்கள் மற்றும் செரோடோனின் ஆகியவற்றை வெளியிட உதவுகிறது. நடைபயிற்சி என்பது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை நிர்வகிக்கவும் தடுக்கவும் உதவும் இயற்கை வழி என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


குறைந்த இரத்த அழுத்தம், மேம்பட்ட இரத்த ஓட்டம் மற்றும் இதய நோய்க்கான ஆபத்துக்கள் குறைய என அனைத்து வகையான இதயம் சம்பந்தமான நன்மைகளைப் பெற உங்கள் நாளைத் தினமும் நடைப்பயிற்சி உடன் தொடங்க வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உங்கள் இதய நோய் அபாயத்தை 35% குறைக்கும். எனவே தினமும் காலையில் எழுந்து சிறிது நேரம் நடப்பதன் மூலமாகவும் இத்தகைய நன்மைகளை நீங்கள் பெற முடியும். 

Similar News