மெக்கா பணியில் முதல்முதலாக ஈடுபடும் பெண் ராணுவத்தினர்: சவுதி அரசின் அதிரடி நடவடிக்கை!

Update: 2021-07-22 13:02 GMT

முஸ்லிம்கள் புனிதமாக கருதும் மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புனித பயணத்தை மேற்கொள்வர். இந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வெளிநாட்டவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனாலும் தற்பொழுது மெக்காவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவின் பாதுகாப்பு பணிக்காக ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் முதல் முறையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளை சவுதி அரசின் இளவரசர் முகமது பின் சல்மான் மேற்கொண்டு வருகிறார். முஸ்லிம் பழைமைவாத கொள்கைகளை மாற்றி வருகிறார். பெண்களுக்கு அதிக அதிகாரம், சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவரின் இந்த நடவடிக்கைகள் மூலமாக வருங்காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகரான பணிகளில் ஈடுபட முடியும் என்று பெண்களிடையே தற்போது புதிய நம்பிக்கை உருவாகி உள்ளது. 


சவுதி அரேபியாவில் முஸ்லிம் பெண்களும் தங்களுக்கான தகுதியைப் பெறும் வகையில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது. ராணுவத்திலும் பெண்கள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மெக்கா மற்றும் மதீனாவில், பாதுகாப்புப் பணியில், ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த, ஏப்ரல் மாதம் முதல் இருந்து இவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். ஆனால் தற்பொழுது அதிக அளவில் பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Similar News