இயற்கையான முறையில் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் மூலிகை!

Update: 2021-07-23 00:30 GMT

நமது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அது இந்த கொரோனா சமயத்தில் கண்டிப்பாக நம் நோயெதிர்ப்பு மண்டலம் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருந்தே ஆக வேண்டும். சமீப காலமாக அதிகமான மக்கள் ஆயுர்வேத மூலிகைகள் குறித்து தெரிந்துக் கொள்ளவும் ஆரம்பித்துள்ளனர். மேலும் ஆயுர்வேத மூலிகைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு மூலிகை தான் நீர் பிரம்மி. 


நினைவாற்றாலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மூளையையும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ஓர் அற்புத மூலிகை. நீர் பிரம்மியை தினசரி ஆறு வாரங்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு வேளைக்கு 300 மி.கி அளவில் உட்கொள்வது மிகசிறந்த நினைவாற்றலை வழங்கும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிப்பட்டுள்ளது. இது உங்கள் மனநிலையை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆன கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. இது உடலில் செரோடோனின் அளவை அதிகரிப்பதன் மனஅழுத்தத்தை குறைக்கவும் செய்கிறது. 


அல்சைமர் நோய் குணப்படுத்த முடியாதது. ஆனால் நீர் பிரம்மி மூளையில் நோயின் தாக்கத்தை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இது நினைவகத்தை அதிகரிக்கும் மூலிகையாகும். நமது அன்றாட உணவில் ஆக்ஸிஜனேற்ற உணவுகளைச் சேர்ப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாகும். எனவே நீர் பிரம்மி மூலிகையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் உயிரணு சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. 


Similar News