ஆய்வு என்ற பெயரில் அத்துமீறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்- கொதிக்கும் இந்து முண்னணி !
அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னரிடம் மனு
விடுமுறை நாட்களில் புனித தலங்கள் திறக்கபடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சனி கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்கு இந்து முண்ணனி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முண்னணி அமைப்பு கவர்னரிடம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழக அரசின் கொரோனா கால நடவடிக்கைகளை மீறி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திமுக காரர்களுடன் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வு ஆலயம் திறக்கப்பட்டிருக்கும் போது நடைபெற்றால் பக்தர்களின் கருத்துக்களை கேட்டிருக்க முடியும்.
ஆனால் ஆலயம் மூடப்பட்டிருக்கும் போது ஆய்வு மேற்கொண்டுள்ளது தமிழக அரசின் உத்தரவை மீறியுள்ள செயலாகும். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.
ஆய்வு என்ற பெயரில் அத்துமீறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் - இந்துமுன்னணி கவர்னருக்கு மனு...
— Hindu Munnani (@hindumunnaniorg) September 26, 2021
இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் திரு.ராமமூர்த்தி அனுப்பியுள்ள மனுவில்
இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி
திருக்கோயிலுக்கு நேற்றையதினம் (25.9.2021சனி) ஆய்வுக்கு வந்த pic.twitter.com/0tnPAmPeXP